திருப்பாவை பாசுரம் 10 - Thiruppavai pasuram 10 in Tamil
எம்பெருமானை ஒருவர் பற்றி விட்டால் அவர் வேறு எதையும் செய்ய வேண்டாம். நாம் நம்முடைய முயற்சியால் எம்பெருமானை அடைவது கஷ்டம். சித்தமாக இருக்கும் உபாயம் எதுவெனில் அவனைப் பற்றுவது தான். அந்த உறுதி நம்மில் இருந்தால் நம் வேறு எதுவும் செய்ய வேண்டாம். அத்தகைய சிறப்பு மிக்க ஒரு கோபிகையை, கண்ணனை நேரே பற்றியவளை வாசல் திறக்கவிட்டாலும் பரவாயில்லை; ஒரு பதிலாவது தரக் கூடாதா என்று கேட்கும் படி இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலில் கூறப்பட்டுள்ள திவ்ய தேசம் திருக்காட்கரை (திருகாகரா) என்னும் கேரள திவ்ய தேசம். இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.