திருப்பாவை பாசுரம் 12 - Thiruppavai pasuram 12 in Tamil
ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெரியாழ்வாருக்கு திருக்குமரியாய் அவதரித்த ஆண்டாள் தன்னை கோபிகையாக அவதாரித்து கண்ணனை குறித்து நோன்பு நோற்கிறாள். அவள் ஸ்ரீ வில்லிப்புத்தூரையே திரு ஆய் பாடியாகக் கருதுகிறாள். இந்த பாசுரத்தில் கண்ணனுடைய நண்பனாக இருக்கும் இடையன் ஒருவன் இறை கைங்கரியம் செய்யும் பொருட்டு சென்றதால் எருமைகள் தங்களது கன்றினை நினைத்து தாங்களே பால் சுரந்து இல்லத்தை பால் சேறாக மாற்றுகிறது. அத்தகு பெருமை மிக்கவனின் தங்கையை இவர்கள் எழுப்புகிறார்கள். தலையில் பனி விழ, உந்தன் தலை வாசலில் நாங்கள் வந்து நிற்கிறோம். மனதிற்கு இனியவனை நாங்கள் பாடவும் நீ எழவில்லையே. எழுந்திராய் என்று எழுப்புகிறார்கள். இந்தப் பாடலில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் தில்லை திருசித்திரக் கூடம் (கோவிந்த ராஜப் பெருமாள்). இந்த பாசுரத்தின் பொருளை முழுமையாக அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.