திருப்பாவை பாசுரம் 13 - Thiruppavai pasuram 13 in Tamil
சூடிக் கொடுத்த நாச்சியார் ஆறாவது பாசுரத்தில் இருந்து எம்பெருமானை அடையும் போது அடியவர்களை முன்னிட்டே அடைய வேண்டும் என்ற கருத்திற்கிணங்க அனைவரையும் எழுப்பி வந்து கொண்டிருக்கிறாள். இந்த பாசுரத்தின் படி ராமனுடைய புகழை பாடுபவர்கள் தனியாகவும் கண்ணனின் புகழை பாடுபவர்கள் தனியாகவும் இரு கோஷ்டியாக செல்கிறார்கள். கொக்கு வடிவில் வந்த பகாசுரனை கண்ணன் கொல்கிறான் என்று அவன் பெருமையை ஒரு சாரார் பாட பொல்லாத அரக்கரை கொன்றவன் ராமன் என மற்றொரு சாரார் பாடிக் கொண்டு பாவைக் களம் செல்கிறார்கள். கண்ணழகு மிக்க கோபிகையை எழுப்பி கூட வருமாறு அழைக்கிறார்கள். இந்த பாசுரத்தில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் திருக்குடந்தை. எம்பெருமான் சரித்திர பெருமை பாடும் இந்த பாசுரத்தின் பொருளை அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.