திருப்பாவை பாசுரம் 16 - Thiruppavai pasuram 16 in Tamil
வேதம் வல்லார்களைக் கொண்டு தான் எம்பெருமானைப் பற்ற வேண்டும் என்றும் அதனை முன்னிட்டு கண்ணனை காணச் செல்ல இது வரை கோபிகைகளை எழுப்பி வந்ததை நாம் அறிந்தோம். கோவிலுக்கு சென்றால் நித்ய சூரிகள் எல்லோரையும் சேவித்து விட்டு பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானை பற்ற வேண்டும் என்னும் விஷயமெல்லாம் நமக்கு திருப்பாவையின் இந்த பாசுரம் மூலம் தெரிய வருகிறது.கண்ணபிரானின் திருமாளிகையை காவல் காத்துக் கொண்டிருக்கும் க்ஷேத்திரபாலகர்களிடம் அதாவது கோவில் காப்பான் வாயில் காப்பான்களிடம் அனுமதி பெற்று உள்ளே செல்வதை பற்றி இந்த பாசுரத்தில் அனுபவிக்கலாம். இந்த பாசுரத்தில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் திருக்குறுங்குடி வடிவழகிய நம்பி ஆகும். இந்த பாசுரத்தின் பொருளை அனுபவிக்க தொடர்ந்து இந்த வீடியோவைக் காணுங்கள்.