திருப்பாவை பாசுரம் 2 - Thiruppavai pasuram 2 in Tamil
இந்த இரண்டாவது பாசுரத்தில் நோன்பை தொடங்கியிருக்கும் நாம் செய்ய வேண்டியவை யாவை தவிர்க்க வேண்டியவை யாவை என்று ஆண்டாள் கூறுகிறாள். எம்பெருமானின் திருவடிகளுக்கு கைங்கர்யம் செய்வதும் அவரை அடைவதுமே வாழ்க்கை ஆகும். எனவே தான் யாரெல்லாம் நோன்பு நோற்கிறார்களே அவர்களை நோக்கி கோதை, வையத்து வாழ்வீர்காள் என்று விளிக்கிறாள். மார்கழி மாதம் முழுவதும் நெய், பால் முதலான போக வஸ்துகளை உண்ணக்கூடாது. மலர், மை முதலான திரவியங்களை இட்டு நம்மை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது. பெரியோர்கள் செய்யாத செயல்களை செய்யக் கூடாது. தான தருமங்களை அதிகம் செய்ய வேண்டும். இந்த பாசுரத்தில் குறிக்கப்படும் திவ்ய தேசம் திருப் பாற்கடல். இந்தப் பாடலின் முழுப் பொருளையும் உணர்ந்து அனுபவிக்க வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.