திருப்பாவை பாசுரம் 7 - Thiruppavai pasuram 7 in Tamil
இந்த பாசுரத்தில் பேய் பெண்ணே என்று விளித்து ஒரு பெண்ணை எழுப்புகின்ற னர் ஆண்டாள் மற்றும் அவள் குழுவினர். பறவைகள் கூட கண்ணன் பெயரைக் கூற வேண்டும் என்று ஆசைப்படுகிறது மற்றும் கலந்து பேசுகிறது எனும் போது நீ ஏன் இன்னும் எழுந்து கொள்ளாமல் இருக்கிறாய். மத்தினால் தயிர் கடையும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? கண்ணபிரானின் புகழைப் பாட நாங்கள் செல்லும் போது தலைவியான நீயும் வர வேண்டும் , எனவே கதவைத் திற என்று கோபிகையை எழுப்பும் இந்தப் பாடலில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் திருவாய்ப்பாடி(திரு ஆயர்பாடி) கீசு கீசு என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.